ஊட்டி எனும் உதகமண்டலத்தின் சீஸன் நேரம் மார்ச்சிலேயே துவங்கிவிடுகிறது இப்போதெல்லாம் (முன்பு ஏப்ரல் – மே). ஜூலை வரை நீடிக்கும் இந்த சீஸனில் ஊட்டிக்குப் போனால் தங்குவதற்கு இடம் கூட கிடைக்காமல், கசகசவென்ற மக்கள் வெள்ளத்தில் நீந்த வேண்டி வரும்.
ஏன்டா வந்தோம் ஊட்டிக்கு என்ற சலிப்பும் அலுப்பும் மிஞ்சும் அளவுக்கு ஊட்டி நெரிசல் மிக்க நகரமாகிவிட்டது சீஸனில்.
ஊட்டியின் இயற்கை வனப்பையும், பருவநிலையையும் ரசித்து அனுபவிக்க சிறந்த மாதங்கள் பனியும் மழையும் மாறி மாறி மனதை நனைக்கும் அக்டோபர் – நவம்பர் – டிசம்பர் மாதங்கள்தான்.
குறிப்பாக நவம்பர் மாத பனிக் காலைகளையும், மழை பகல்களையும், குளிர் இரவுகளையும் தனிமையாகவோ அல்லது இனிய துணையுடனோ ஒருமுறை அனுபவித்துப் பாருங்கள்… அது எழுத்தில் சொல்ல முடியாத இனிமையை உணரவைக்கும்!
அதிலும் டிசம்பர் 24-ம் தேதி இரவில் ஊட்டியில் தங்குவது விவரிக்க முடியாத அனுபவத்தைத் தரும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஊரே ஜொலிக்கும். சாலையோர பூங்காக்கள் அனைத்திலும் கிறிஸ்துமஸ் மரங்களும், குழந்தை ஏசு சிலைகளும், வான தூதர் வருகையும் சித்தரிக்கப்பட்டிருக்கும்…
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லை!
இந்த சீஸனில் மேட்டுப் பாளையத்திலிருந்து ரயிலில் செல்வது இன்னுமொரு தனி அனுபவம். ஆனால் மழைக்காலம் என்பதால் பாதைகள் சரிந்துபோய், இந்தப் பயணம் சாத்தியப்படுவது சந்தேகம்தான்!
சாலைப் பயணம் என்றால் அரவங்காடு மற்றும் வெலிங்டன் திருப்பங்களில் நடுப்பகலிலேயே முகத்தில் மோதும் மேகங்களையும் பனிச்சாரல்களையும் அனுபவிக்கும் பரவசத்தை மிஸ் பண்ண வேண்டாம். இரு சக்கர வாகனம் அல்லது கார் பயணங்களில் இந்த இன்பத்தை அதிகம் அனுபவிக்கலாம்!
மேலும் படங்கள்…
-அமிர்தா
Read also



















http://thisistraffic.co.uk/ Thanks for that awesome posting. It saved MUCH time
awesome….cool breeze.. thanks for the images.