கடும் மழை… லாரி ஸ்ட்ரைக்… காய்கறிகள் கிடுகிடு விலை உயர்வு!

By The Editor, Posted on 04 Dec 2010 at 2:06am, 0 comments, | 223 views

vijetableசென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மற்றும் லாரி ஸ்ட்ரைக்கால் காய்கறிகளின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் காய்கறிச் செடிகள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. இதையடுத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட மார்கெட்டுகளுக்கு வரும் காயகற்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 750 லாரிகளில் காய்கறிகள் வரும. தற்போது 300 லாரிகள் மட்டுமே வருகின்றன. இதனால் காய்கறி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும் பல பகுதிகளிலிருந்து வரவேண்டிய லாரிகள் கடந்த சில தினங்களாக ஸ்ட்ரைக்கில் இறங்கிவிட்டன. இதனாலும் காய்கறி வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Read also
Advertisement

Leave a Reply