பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் வெற்றிக்குப் பின் ராஜேஷ் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் அறிமுகமாகிறார்.
ஹன்சிஹாவின் அதிர்ஷ்டத்தில் அவர் நடித்த எல்லா படமும் ஊத்திக்கொள்ள அதிர்ஷ்டமாக இந்த படத்தை எதிர்நோக்கி இருக்கிறார்.
படத்தின் பெயர் “ஒரு கல் ஒரு கண்ணாடி”. அதாவது சுருக்கமாக ஓ.கே..ஓ.கே!!
ஓ.கே..ஓ.கேவில் விமான பனிப் பெண்ணாக வரும் ஹன்சிஹாவுக்கும், உதயநிதிக்கும் இடையே உள்ள காதலில் ஒருகட்டத்தில் உரசல் ஏற்படுகிறது.
அதனால் வீராப்பாகும் உதயநிதி உலகில் நீ மட்டும்தான் அழகா வேறு அழகான பெண்களே இல்லையா? என்று எகிறிவிட்டு தனது காதலை இன்னொரு அழகான பெண்ணான சினேகாவிடம் பத்த வைக்கிறார். அதற்கு சினேகா ஓ.கே..ஓ.கே சொல்கிறாரா என்பது கிளைமாக்ஸ் ட்ராவல்.
இதற்கு நமீதா, ஸ்ரேயா, தமன்னா, நயன் உட்பட பல நாயகிகளை நாடியும் அவர்கள் ‘நோ” சொல்லிவிட, இறுதியாக உதயநிதி ஜோடியாக நடிக்க சினேகா ஓகே சொல்லியிருக்கிறார்.
பெரிய சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கேள்வி.. அப்போ ஓகே தான்!
Read also- அஜீத் - ஷாலினி 12வது திருமண நாள் - திரையுலகினர் வாழ்த்து!
- 'கொலவெறி' புகழ் '3' மார்ச் 30ல் ரிலீஸ்!
- மனைவி, குழந்தை இருந்தாலும் பரவாயில்லை... ஆஞ்சநேயலுதான் எனக்கு வேணும்! - அனன்யாவின் அடம்
- மறுபடியும் 'சிந்து சமவெளி'... இது அமலாவின் (விபரீத) ஆசை!
- ஜெனிலியா திருமண நிகழ்ச்சிகள்... நட்சத்திர விருந்துடன் தொடங்கின!
