பெர்ன்: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுவிட்சர்லாந்தில் மாவீரர் தினம் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
சுவிஸ் Forum Fribourg மண்டபத்தில் நவம்பர் 27-ம் தேதி நடந்த நிகழ்வில் வரலாறு காணாத மக்கள் நிறைந்திருக்க எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. காலத்தின் தேவை கருதி தேசியத் தலைவர் பிரபாகரன் 2007, 2008 ஆம் ஆண்டுகளில் ஆற்றிய மாவீரர் உரைகள் மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மணி ஓசையுடன் பறை முழங்கி துயிலும் இல்லப் பாடலுடன் அனைத்து மக்களும் சுடர் ஏந்தி மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
தாயக, தாய்த்தமிழக உறவுகளின் தேசிய வெளிப்பாடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டன. அத்தோடு தமிழ்க் கல்விச் சேவையினரால் நடத்தப்பட்ட மாவீரர் ஞாபகார்த்தப் பேச்சுப் போட்டியிலும் ஓவியப் போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளரும் பெரியார் திராவிடக் கட்சியின் பொதுச்செயலாளருமான விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். சுவிஸ் வாழ் கலைஞர்கள் கலைநிகழ்வுகளை எழுச்சியோடும் உணர்வோடும் வழங்கியிருந்தனர்.
இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன் ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற பாடலோடு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற எங்கள் உறுதி மொழியை அனைவரும் உரக்க எடுத்ததுக் கொண்டு தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளை நிறைவு செய்தனர்.
Read also- 'தமிழ் இனி' மணி ராம் சிறந்த குறும்பட இயக்குநர்... சிறந்த படம் இடுக்கண்!
- திருக்குறள் போட்டி: பதிமூன்று வயது சீதா 320, பஞ்சு அருணாசலம் மகள் கீதா 500!
- அமெரிக்காவில் திருக்குறள் போட்டி... பரிசு 5000 டாலர்!
- ஆஸ்திரேலியாவில் உருவான முதல் தமிழ் சினிமா இனியவளே காத்திருப்பேன் - அக் 6-ல் வெளியாகிறது!
- ஜெ விஷன் 2023 நிறைவேறினால் உலகளவில் தமிழகத்தின் தரம் உயரும்!- டாக்டர் ராஜன் நடராஜன்
