டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நியமித்த ஐவர் குழு நிராகரித்துவிட்டது.
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த ஐவர் குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் 2 வது நாளாக நடைபெற்றது. கூட்டத்தில் அணையின் நீர் மட்டத்தை குறைக்க கோரிய கேரளாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் ஐவர் குழுவில் ஒருவரான கே.டி. தாமஸ் கூறுகையில், “கூட்டத்தில் கேரளாவின் கோரிக்கையான 136 அடி நீர்மட்டத்தை 120 அடியாக குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டம் தற்போது இருப்பது போலவே தொடர வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. அதில் நாங்கள் தலையிட மாட்டோம்.
புதிய அணை கட்டுவது தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் இரு மாநில அரசுகளின் பதிலை எதிர்பார்த்து உள்ளோம். பதில் வந்ததும் இறுதி கட்ட அறிக்கை தயாரிக்கப்படும்,” என்றார்.
வருகிற 24, 25 ந்தேதிகளில் நடைபெறும் ஐவர் குழு ஆலோசனை கூட்டத்தில் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
Read also- கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்...!
- கூடங்குளம்: ஏப்ரல் 7-ல் அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பு - உதயகுமார்
- திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இளம் பெண்ணை கொல்ல முயற்சி: திருமண தரகர் கைது!
- அமெரிக்க தீர்மானத்தை திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டும் - கருணாநிதி
- ஐஏஎஸ் தேர்வில் மறைமுக இந்தித் திணிப்பு - பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
