சென்னை: கேரளாவின் கேவலமான தண்ணீர் அரசியலைக் கண்டித்தும் முல்லைப் பெரியாறு அணையைக் காக்கக் கோரியும் தமிழ் சினிமா இயக்குநர்கள் முல்லைப் பெரியாறு அணை எதிரே, உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
வரும் 8-ம் தேதி இந்தப் போராட்டம் இயக்கநர் பாரதிராஜா தலைமையில் நடக்கிறது.
சென்னையிலிருந்து திரையுலகினர் பஸ்களில் புறப்பட்டு தேனி சென்று அங்கிருந்து முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதிக்குச் செல்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாள நடிகர், நடிகைகள் கேரள அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த உண்ணாவிரதம் வரும் 8ம் தேதி முல்லைப் பெரியாறு அணை அருகில் நடக்கிறது.
இயக்குனர்கள் அனைவரும் பஸ், வேன்களில் சென்னையில் இருந்து செல்கின்றனர். உண்ணாவிரதத்தில் நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இயக்குனர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read also- கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்...!
- கூடங்குளம்: ஏப்ரல் 7-ல் அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பு - உதயகுமார்
- திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் இளம் பெண்ணை கொல்ல முயற்சி: திருமண தரகர் கைது!
- அமெரிக்க தீர்மானத்தை திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டும் - கருணாநிதி
- ஐஏஎஸ் தேர்வில் மறைமுக இந்தித் திணிப்பு - பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
