முல்லைப் பெரியாறு விவகாரம் – கேரளாவில் வேட்டை, நண்பன் ரிலீஸ் ஆகுமா?

By The Editor, Posted on 06 Jan 2012 at 8:18am, 0 comments, | 164 views

vn-1முல்லைப் பெரியாறு விவகாரத்தால் தமிழகம் – கேரளா இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளதால், பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் வேட்டா, நண்பன் படங்கள் கேரளாவில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்க்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் இருந்தது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் வெடிக்கும் வரை.

ஆனால், இப்போது அங்குள்ள தமிழர்களை கேரளத்தினர் பகைவர்களாகப் பார்க்கும் சூழல் உள்ளது. மலையாள சினிமாக்காரர்களும் கேரள அரசின் அநியாயப் போக்குக்கு ஆதரவாகவே உள்ளனர்.

இனி தமிழ்ப் படங்களை கேரளாவில் வெளியிட விடமாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

எனவே நண்பன் படமும், வேட்டையும் ரிலீஸ் ஆவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

இந்த நிலையில் தான் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள வேட்டை படத்தை கேரளாவில் ரிலீஸ் பண்ண முடியாவிட்டால் பரவாயில்லை. அதற்கான நஷ்ட ஈட்டை என் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளுங்கள், என நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் ஹீரோக்கள் ஆர்யா, மாதவன் இருவருமே கேரள தொடர்பு உடையவர்கள்தான்.

ஆர்யா தப்பித்தால் போதும் என இப்படி ஒரு முடிவைச் சொல்லியிருக்கிறார். ஆனால் நண்பன் தயாரிப்பாளரிடம் விஜய் என்ன சொல்லியிருப்பாரோ தெரியவில்லை!!

Read also
Advertisement

Leave a Reply