சசிகலா அண்ணன், நடராஜன் தங்கையை கட்சியிலிருந்து விரட்டினார் ஜெ!

By editor, Posted on 26 Jan 2012 at 11:48pm, 0 comments, | 117 views

2Jayalalithaசென்னை: அதிமுகவிலிருந்து மேலும் சில சசிகலா உறவினர்கள் தூக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சசிகலாவின் அண்ணனும், நடராஜனின் தங்கையும் அடக்கம்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவிலிருந்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சுந்தரவதனம், சந்தான லட்சுமி, வைஜெயந்தி மாலா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுகின்றனர். இவர்களிடம் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.

இதில் சுந்தரவதனம் என்பவர் சசிகலாவின் அண்ணன் ஆவார். வைஜெயந்தி மாலா என்பவர் நடராஜனின் தங்கை ஆவார். சந்தான லட்சுமி, சசிகலாவின் அண்ணி ஆவார். அதாவது சுந்தரவதனத்தின் மனைவி.

சுந்தரவதனத்தின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் மகள் அனுராதா. இதில் வெங்கடேஷ் ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டார். மகள் அனுராதாவைத்தான், டிடிவி தினகரனுக்கு கட்டிக் கொடுத்துள்ளார் சுந்தரவதனம்.

Read also
Advertisement

Leave a Reply