ஜெனிலியா திருமண நிகழ்ச்சிகள்… நட்சத்திர விருந்துடன் தொடங்கின!

By The Editor, Posted on 27 Jan 2012 at 9:27am, 0 comments, | 266 views

gene-rithமுன்னணி நடிகை ஜெனிலியாவின் திருமண நிகழ்ச்சிகள் மும்பையில் இன்று தொடங்கின.

நடிகை ஜெனிலியாவும் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் பெற்றோர் எதிர்ப்பை மீறி பல ஆண்டுகள் காதலித்து, இப்போது அதே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். மணமகன் ரிதேஷ், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் என்பதால் வரும் பிப்ரவரி 4-ம் தேதி மும்பையில் மிக விமர்சையாக திருமணம் நடக்கிறது.

மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக அங்குள்ள ஹயாத் ரீஜென்ஸி நட்சத்திர ஓட்டலில் அறைகள் மற்றும் அரங்குகளை மூன்று நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

மாப்பிள்ளை அழைப்பு மற்றும் மணமகள் மெகந்தி அலங்கார நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் (29-ந்தேதி) நடக்கின்றன. திருமணத்தையொட்டி நடிகர், நடிகைகளுக்கு ஜெனிலியாவும் ரிதேசும் இணைந்து விருந்து கொடுத்தனர். ஓட்டலில் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் குடும்பத்தோடு வந்தார்கள்.

இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, ஜெரினாகான், நேகா துபியா, ஜியாகான், சமீராரெட்டி, சுஷ்மாரெட்டி, பெராகான், அமிஷா படேல், நடிகர்கள் கரன்ஜோகர், ஜாயித்கான், சஞ்சய்தத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவரும் ஜெனிலியாவுக்கும் ரிதேசுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். விருந்தில் ஜெனிலியாவும் ரிதேஷும் காதல் மகிழ்ச்சி பொங்க கைகோர்த்தபடி அனைவருக்கும் உபசாரம் செய்தனர்.

Read also
Advertisement

Leave a Reply