விஜய்யின் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ காலவரையின்றி தள்ளிப் போனது!!

By The Editor, Posted on 07 Aug 2012 at 8:35pm, 0 comments, | 170 views


சென்னை: கிட்டத்தட்ட இது அதிகாரப்பூர்வ அறிவிப்புதான். விஜய் நடிக்க, கவுதம் மேனன் இயக்குவதாக இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று, காலவரையின்றி தள்ளிப் போனது.

இந்தப் படத்துக்கு பதிலாக, ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து, கால்ஷீட்டும் ஒதுக்கிக் கொடுத்துவிட்டாராம் விஜய்.

சமீபத்தில் ஏஎல் விஜய் தான் இயக்கிய தாண்டவம் படத்தை விஜய்க்குப் போட்டுக் காட்டியுள்ளார். அதைப் பார்த்துப் பாராட்டிய விஜய், நம்ம படத்தை உடனே ஸ்டார்ட் பண்ணலாம். நவம்பரிலிருந்து என் டேட்ஸ் உங்களுக்குதான் என்று கூறிவிட்டாராம்.

துப்பாக்கி பட வேலைகள் வரும் செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிகிறதாம். அதற்கு அடுத்த மாதம் விஜய் ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுக்கிறார். நவம்பர் முதல்வாரம் ஏஎல் விஜய் – இளையதளபதி பட பூஜை!

அப்போ…கவுதம் மேனன் படம்… ? அதை அப்புறம் பாத்துக்கலாம் என்று கூறிவிட்டாராம் விஜய். சீமானின் பகலவனுக்கு நேர்ந்த கதிதானா?!

-வணக்கம் இந்தியா

Read also
Advertisement

Leave a Reply