சென்னை: இனி கட்சியின் விளம்பர பேனர்கள், போஸ்டர்களில் அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். காலந்தொட்டு அ.தி.மு.க. கழகத்திற்கென்று வகுக்கப்பட்ட நெறிமுறைகளை தொடர்ந்து நாம் கடைபிடித்து வருகின்றோம்.
கழகம் தொடங்கப்பட்ட காலந்தொடங்கி எம்.ஜி.ஆர். உத்தரவுப்படி, நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிற்கு நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் வைக்கின்ற வரவேற்பு பலகைகள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் போன்றவற்றில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது படங்கள் மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்தன.
புரட்சித்தலைவி அம்மா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தலைமை ஏற்ற பிறகு, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது படங்களை மட்டுமே பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தோம்.
ஆனால் இந்த நடைமுறைக்கு மாறாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு வருகை தரும் அமைச்சரின் புகைப்படத்தை மட்டுமே சிலர் விளம்பர பேனர்களில் போட்டுவிட்டு மற்ற நிர்வாகிகளின் படங்களை தவிர்த்து விடுகின்றனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் அமைச்சரின் புகைப்படத்தை தவிர்த்து தங்களுக்கு வேண்டியவர்களின் புகைப்படங்களை போட்டு விளம்பரங்கள் செய்கின்றனர்.
இதனால் கழகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அப்பகுதியில் வைத்திருக்கும் பேனர்களை கிழித்து விடுவதாக செய்திகள் வருகின்றன. இச்செயல்கள் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, தவறான முன்னுதாரணமாகவும் அமைந்து விடுகின்றன. நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிற்கு கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களை விளம்பரங்களில் பயன் படுத்துவதற்கு கழகத்தில் அனுமதியும் இல்லை. அத்தகைய பழக்கமும் இதுவரை கிடையாது.
எனவே கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனி வரும் காலங்களில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது படங்களை மட்டுமே விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளில் பயன்படுத்த வேண்டும்.
நிகழ்ச்சிக்கு வருகை தரும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும், அவர்கள் வகித்து வரும் பதவி மற்றும் பொறுப்புகளையும் எழுத்துக்களில் குறிப்பிட்டால் போதும். அ.தி.மு.க.வின் நெறிமுறைகளுக்கு மாறாக, இனிமேல் மற்றவர்களுடைய படங்களை போட்டு விளம்பரம் செய்யும் கழகத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: நடிகர் சூர்யாவின் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இதுவரை அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த அனைத்து நாயகிகளும் கலந்து கொள்கின்றனர்.
அயன் படத்துக்குப் பிறகு கே.வி. ஆனந்த் – சூர்யா இணைந்துள்ள படம் மாற்றான். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளதால் மாற்றான் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாற்றான் பட பாடல் வெளியீட்டு விழா வருகிற 9-ந் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. மிக பிரமாண்ட நிகழ்ச்சாயாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் நடனம் ஆடுகிறார்கள். இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
எனவே விழாவில் பங்கேற்கும்படி இதுவரை சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளை கே.வி.ஆனந்த் அழைத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் நயன்தாரா, திரிஷா, அசின், ஸ்ருதிஹாசன், தமன்னா, திவ்யா ஸ்பந்தனா, சமீரா ரெட்டி ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர். மாற்றான் படத்தில் ஜோடியாக நடிக்கும் காஜர் அகர்வாலும் கலந்து கொள்கிறார். சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தியும் இதில் கலந்து கொள்கிறார்.
அனைவரும் மேடையில் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர். இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் லைவாக இசை கச்சேரியை நடத்துகிறார்.
முன்னணியில் உள்ள பாடகர்கள் பலரும் இதில் பங்கேற்று பாடுகிறார்கள்.
You can subscribe to Vanakkam India by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!
| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| « Jul | Sep » | |||||
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||