மும்பை: இந்த ஆண்டு பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக இருந்த சன்னி லியோன் நடித்த ஜிஸ்ம் 2 படுதோல்வியைத் தழுவியுள்ளது.
கனடாவில் ஆபாசப் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இனி தன் பழைய வேலையையே பார்க்கலாம். அவர் அதற்குத்தான் லாயக்கு என்று ரசிகர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு உள்ளது படம்.
படத்தின் நாயகன் ஒரு தீவிரவாதி. அவனிடம் உள்ள சில முக்கிய ரகசியங்களைக் கைப்பற்ற இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் முயலுகிறார்கள். அதற்காக ஆபாசப் பட நடிகையான சன்னி லியோனை அணுகுகிறார்கள். சன்னியும், அந்தத் தீவிரவாதியும் முன்னாள் காதலர்கள். ஆனால் நாட்டுக்காக மீண்டும் தீவிரவாதியுடன் பழகி ரகசியங்களைக் கவர்ந்து வருமாறு கேட்கிறார்கள். இதில் சன்னி லியோனுக்கு வெற்றி கிடைத்ததா என்பதுதான் கதை.
ஏற்கெனவே பிபாஷா பாசு நடித்து வெளியான ஜிஸ்ம் படத்தின் தொடர்ச்சி இது. ஆனால் முந்தைய படத்தில் இருந்த விறுவிறுப்பும், பிபாஷாவின் கவர்ச்சியும் இந்தப் படத்தில் இல்லை என்கிறார்கள். சன்னி லியோன் என்னதான் கவர்ச்சியாக வந்தாலும், அவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டு.
அப்படியும் முதல் நாள் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்லாகப் போயிருக்கின்றன. ஆனால் சனிக்கிழமையே ரிசல்ட் தெரிந்துவிட்டது. வெளிநாடுகளிலும் இந்தப் படம் அவுட்.
ஆனால் சன்னிக்கு கவலை இல்லை. அவருக்கு எவர்கிரீன் மார்க்கெட் உள்ளது ஆபாசப் படங்களில்!
துப்பாக்கி – விஜய்யின் அதிரடி ஸ்டில்கள்
பெயரை மீரா சோப்ரா என மாற்றிக் கொண்ட நடிகை நிலா, அடுத்து தன் காதலரையும் மாற்றிவிட்டாராம்.
அன்பே ஆருயிரே’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நிலா.
நிலாவும், ஆர்யாவும் காதலிப்பதாக முதலில் கிசுகிசுத்தனர். பின்னர் மும்பை தொழில் அதிபர் ஒருவருடன் தீவிர காதலில் இருப்பதாக நிலா குறித்து செய்திகள் வந்தன.
ஒருநாள் அந்த தொழில் அதிபர் மனைவி திடீரென மரணம் அடைய, அதற்கு நிலாதான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது. போலீசாரும் நிலாவிடம் விசாரணை நடத்தினர்.
இப்போது மீரா சோப்ரா என பெயர் மாற்றிக் கொண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார் நிலா.
மேலும் தொழிலதிபருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளாராம்.
இப்போது இந்தி நடிகர் அர்ஜன் பாஜ்வாவை நிலா காதலிப்பதாக புது தகவல் பரவியுள்ளது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிலா நடத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் அர்ஜன் பாஜ்வாவும் தவறாமல் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
சூரத்: அரசியல் கட்சி தொடங்க சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் முடிவு செய்துள்ளதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஊழல் எதிர்ப்பு இயக்க பேனரையும் ஹசாரே உருவப் படத்தையும் தீ வைத்து எரித்தனர்.
வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தது அன்னா ஹசாரே ஆதரவுக் குழு. அப்போது அரசாங்கம் ஹசாரே குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. அரசாங்கமும் முக்கியத்துவம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் தற்போது நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலையில் அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வெறுப்பின் உச்சத்துக்குப் போன அன்னா ஹசாரே அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் ஹசாரே ஆதரவாளர்களின் ஒருதரப்பினர் இதை ஏற்க மறுத்தனர். அரசியலில் குதிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட அதே உண்ணாவிரதப் பந்தலிலேயே ஹசாராவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பியிருந்தனர். இதே எதிர்ப்பு நாடு முழுவதும் அன்னா ஹசாரே குழுவினரிடத்தில் எழுந்தது.
இதன் உச்சகட்டமாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் அன்னா ஹசாரேயின் உருவ படத்தையும் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் பேனர்களையும் எரித்து அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்னா ஹசாரே குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு மற்றொரு சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷூம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
லண்டன்: ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நெவால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் சாய்னா நேவாலுக்கும் தரவரிசையில் உலகின் இரண்டாம் இடத்தில் இருக்கும் சைனாவின் ஷின் வாங்குக்கும் இடையே சனிக்கிழமை போட்டி நடைபெற்றது. இதில் துவக்கத்தில் சாய்னா விறுவிறுப்புடன் முன்னேறினாலும், பின்னர் தவறான ஷாட்களால் பின்னடைவு கண்டார்.
இதனால், முதல் செட்டை 21-18 என்ற புள்ளிகளில் இழந்தார்.
அடுத்த செட் தொடங்கியதும், முதல் பாயிண்ட்டை ஷின் வாங் பெற்றார். ஆனால், ஒரு ஷாட்டை பின்னால் எல்லைக் கோட்டுக்கு அருகே சாய்னா வேகமாக அடித்த போது, பின்னோக்கி நகர்ந்த ஷின் வாங், கால் இடறி விழுந்தார்.
அதில் அவருக்கு பிசகு ஏற்பட்டு போட்டி தடைப்பட்டது. இருப்பினும், மருத்துவ முதலுதவி எடுத்துக் கொண்டு மீண்டும் ஆட வந்தார். ஆனால் மூட்டு பிசகியிருக்கவே, போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, சாய்னா நேவால் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாய்னா பதக்கப்பட்டியலில் இடம்பெற்றார். இந்தப் பதக்கத்துடன் சேர்த்து, இந்தியாவுக்கு இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன (ஒரு வெள்ளி, இரு வெண்கலம்).
ஒரு கோடி பரிசு
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ள சாய்னா நேவாலுக்கு அரியானா அரசு ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளது. இதனை மாநில முதல்வர் பூபேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
You can subscribe to Vanakkam India by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!
| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| « Jul | Sep » | |||||
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||