News

சிபி சக்கரவர்த்தி புறாவை ரசம் வைத்து சாப்பிட்டிருந்தால்… பண்ருட்டி ராமச்சந்திரன்
சிபி சக்கரவர்த்தி புறாவை ரசம் வைத்து சாப்பிட்டிருந்தால்… பண்ருட்டிகேள்வியும் ஜெ பதிலும்!

சென்னை: போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாற்காலியில் உட்கார வைத்து மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். இதன் மீது நடந்த விவாதம் விவரம்,

பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக): சத்தீஸ்கர் மாநிலத்தில் கலெக்டர் கடத்தல், ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ. கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. வறுமை, ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களால்தான் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் தோன்றுகிறார்கள். தமிழகத்தில் வறுமை, துன்பம் ஒருபுறமும், வசதி வாய்ப்பு அதிகரிப்பது என்கிற நிலை மற்றொரு புறம் ஏற்பட்டு ஒரு ஏற்றத்தாழ்வான நிலை இருப்பதால்தான் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதா: தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், வறுமை ஏற்றத்தாழ்வு காரணமாக உருவாகிறார்கள் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் கூறினார். அத்தகைய தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும் தமிழ்நாட்டில் இல்லை. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன்: காவல் துறையினர் சாதாரண மக்களுக்காக உழைப்பவர்கள். அவர்களுடைய பார்வையில் ஒரு புதிய சமூக கண்ணோட்டம் வேண்டும். சாதாரண மக்கள் காவல் நிலையத்திற்கு செல்வதற்கு அஞ்சும் நிலை வரக் கூடாது. ஏழைகள் காவல் நிலையத்தை கண்டு பயப்படக்கூடாது.

ஜெயலலிதா: காவல் நிலையங்களை கண்டு அஞ்சுகின்ற நிலைமை கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில்தான் இருந்தது. தற்போது அத்தகைய நிலைமை இல்லை. காவல்துறையை மக்கள் நண்பனாகத்தான் கருதுகிறார்கள். போலீஸ் நிலையத்திற்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் காவல் நிலையம் சென்றால் அவர்கள் நன்றாக கவனிக்கப்படுகின்றனர். புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் செல்லும் பொதுமக்களுக்கு மரியாதை செய்து அவர்களை நாற்காலி போட்டு அமர வைத்து புகார்களை பெற வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு இதற்கென ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 10 இருக்கைகள் போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி காவல் நிலையம் வரும் மக்கள் உபசரிக்கப்பட்டு அவர்களிடம் புகார் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 11 மாத கால இந்த ஆட்சியில் காவல் நிலையம் செல்வதற்கு மக்கள் அஞ்சுகின்ற நிலை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

பண்ருட்டி ராமச்சந்திரன்: முதலமைச்சரின் நல்ல நோக்கம் வரவேற்கத்தக்கதுதான். ஆனாலும் அதிலுள்ள சில குறைபாடுகளை எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். உதாரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாத்தியனூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற தந்தையும், மகனும் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்று அதில் மகன் இறந்து போனதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. எனவே இன்னும் காவல் நிலையத்தை கண்டு பயப்படும் நிலை உள்ளது.

ஜெயலலிதா: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பத்திரிகைகளில் வந்த ஒரு செய்தியை வாசிக்கிறார். பாலமுருகன் என்ற அந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம் என்று தெரியாது. காவல் துறையினர்தான் காரணம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இவரிடம் இல்லை. இது பற்றி முறையாக இவர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அந்த மாவட்ட காவல் துறை அதிகாரி மற்றும் அந்த காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருடன் உரிய முறையில் விசாரித்து அரசு உண்மை நிலை குறித்து அறிக்கை வெளியிடும்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: முதலமைச்சருக்கு நன்றி. காவல் நிலையங்களின் மீது சாதாரண மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றுதான் கூறினேன். சிபி சக்கரவர்த்தி காலத்தில் வல்லூரு ஒன்று புறாவை துரத்த அந்த புறா மன்னன் நமக்கு அடைக்கலம் தருவார் என்ற நம்பிக்கையுடன்தான் அவரிடம் தஞ்சமடைந்தது. அவர் ரசம் வைத்து சாப்பிட்டு விடுவார் என்றால் அங்கு சென்றிருக்குமா?

ஜெயலலிதா: எதிர்க்கட்சி துணைத் தலைவர் புராண காலத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் ராமாயணத்தை பற்றி பேசினார். இப்போது சிபி சக்கரவர்த்தி கதை பற்றி சொல்கிறார். தற்போது நவீன காலம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் காவல் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: கதையை மட்டும் பார்க்கக் கூடாது. அதன் பின்னால் உள்ள கருத்தையும் பார்க்க வேண்டும். காவல் துறையினரால் பணக்காரர்கள் எவரும் பாதிப்புக்கு ஆளாவதில்லை. சாதாரண ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

ஜெயலலிதா: பணக்காரர்கள் யாரும் காவல் நிலையத்திற்கே செல்வதில்லை. சாதாரண மக்கள்தான் செல்கின்றனர். சாமானியர்களுக்கு காவல் நிலையம் உறுதுணையாக இருக்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன்: காவல் நிலைய மரணங்கள் குறித்து முதலமைச்சர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே 4 பேர் மரணம் என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் 11 பேர் மரணமடைந்துள்ளதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா: நாங்கள் ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் ஒரு சில வழக்கில் சாட்சிகளை விசாரணைக்கு அழைத்து சென்றபோது நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம் 4 பேர் மரணமடைந்ததாகத்தான் அரசு தரப்பில் தகவல் உள்ளது. இவர் 11 பேர் மரணம் என்கிறார். அரசுக்கு வராத தகவல் எப்படி இவருக்கு கிடைத்தது. இதற்கு என்ன ஆதாரம்?

காவல் துறையினர் வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போதும், வழி காவலின் போதும் எதிர்பாராதவிதமாகவும், நோய் காரணமாக மருத்துவமனைக்கு அனுப்பும் போதும் திருடர்கள் என நினைத்து மக்கள் சிலரை தாக்கி அவர்கள் காவல் நிலையம் வரும் போதும் காவல் நிலைய விசாரணைக்கு பிறகு வீடு திரும்பியவர்கள் தற்கொலை செய்து கொண்டாலோ அல்லது உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாலோ அதையெல்லாம் காவல் நிலைய மரணம் என்று சொல்லி விடுகிறார்கள்.

இது தொடர்பாக ஒரு பாரபட்சமற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறோம். அதில் காவல் துறையினர் மீது தவறு இருந்ததாக தெரிய வந்தால் தகுந்த நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. காவல் துறையினரும் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியிருக்கிறோம்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: சாலை விபத்துகள் தமிழகத்தில் அதிகம் நடைபெறுகிறது. உயிரிழப்பும் இங்கு அதிக அளவில் ஏற்படுகிறது.

ஜெயலலிதா: தமிழகத்தில் வாகன எண்ணிக்கைகள்தான் அதிகரித்துள்ளது. சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் குறைந்த அளவில்தான் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு இந்த விவாதம் நடைபெற்றது.

மேலும் முதல்வர் கூறுகையில், போலீசார் ஓய்வு பெற்ற பிறகு சொந்த வீட்டில் வசிக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தர்மபுரியில் ஆசிரியரை தாக்கிய டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அஜீத் – ஷாலினி 12வது திருமண நாள் – திரையுலகினர் வாழ்த்து!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜீத் – ஷாலினியின் 12வது திருமண நாள் இன்று.

ஷாலினியும் அஜீத்தும் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த  2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷாலினியைக் கரம் பிடித்தார் அஜீத்.  காட்டாற்று வெள்ளமாக இருந்த அவர் வாழ்க்கை அதன் பிறகு ஒரு கட்டுக்குள்  வந்தது.

திருமணத்துக்குப் பின்னர்தான் அஜித் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக  உயர்ந்தார். மிகுந்த பக்குவப்பட்ட மனிதராக மாறினார். பேச்சைக் குறைத்துக்  கொண்டு, தன் வேலைகளில் கவனம் செலுத்தினார்.

இவர்களுக்கு 2008-ல் பெண் குழந்தை பிறந்தது. அனோஷ்கா என பெயரிட்டுள்ளனர்.

பில்லா, மங்காத்தா… இப்போது பில்லா-2 வர இருக்கிறது.

தனது  திருமண நாளை இன்று மனைவி, குழந்தை, குடும்பத்தினருடன் சென்னையில்  கொண்டாடினார் அஜீத். அவருக்கு நண்பர்கள், திரையுலகினர் வாழ்த்து  தெரிவித்தனர்.

32 பற்களுக்கிடையில் சிக்கித் தவிக்கும் நாக்கைப் போல – ஜெயலலிதா பேச்சு
சென்னை: போர் வீரர்களுக்கு கூட போர் இல்லாத காலத்தில் ஓய்வு இருக்கும். ஆனால் மனித நாக்குக்கு ஓய்வே கிடையாது. அது பிறந்தது முதல் 32 பற்களுக்கு இடையே தினமும் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்போடு பேசுகிறது. கட்டளையிடும் போது அதற்கேற்ற வகையில் பேசுகிறது. கனிவு காட்டும் போது தேன் சுவை சொற்களை சொல்கிறது. மிரட்ட வேண்டிய நேரத்தில் அதையும் செய்கிறது.  சுவை மிக்க உணவுகளையும் சுவைக்கிறது. இப்படி பல்வேறு கடமைகளையும் திறமையாக காலம் முழுவதும் நாக்கு செயல்படுத்தி வருகிறது. இந்த நாக்கு போலத்தான் என்னுடைய நிலைமையும் என்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசுகையில் அவர் கூறியதாவது:

மண்ணுக்கு மரம் காவல், மரத்திற்கு இலை காவல், பயிருக்கு வேலி காவல், உயிருக்கு உடல்காவல், கண்ணுக்கு இமை காவல், கடலுக்கு கரை காவல் என்பது போல காப்பது ஒன்றையே கடமை என செயல்படுவதுதான் காவல் துறை.  அந்த காவல் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் சிலர் காவல் துறை எப்படி பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தனர். ஒரு சில உறுப்பினர்களின் பேச்சில் கட்சி கண்ணோட்டம் இருந்தது. சிலர் பாராட்டு தெரிவித்தனர்.

உடலில் பல்வேறு உறுப்புகள் உள்ளன. இதில் தலை சிறந்தது நாக்கு. சாமர்த்தியமாக, சாதுர்யமாக, திறமையாக செயல்படுவதில் நாக்குக்கு இணை எதுவும் இல்லை. வாயில் நாக்கை சுற்றி 32 பற்கள் உள்ளன. இது அந்த நாக்கை கடித்து குதறி கிழித்து விடும் கூர்மை பெற்றவை. ஆனாலும் இந்த சாமர்த்தியமான நாக்கு 32 பற்களுக்கு இடையே இருந்து திறமையாக, வெற்றிகரமாக காலம் தள்ளி வருகிறது.

போர் வீரர்களுக்கு கூட போர் இல்லாத காலத்தில் ஓய்வு இருக்கும். ஆனால் மனித நாக்குக்கு ஓய்வே கிடையாது. அது பிறந்தது முதல் 32 பற்களுக்கு இடையே தினமும் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது.

கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்போடு பேசுகிறது. கட்டளையிடும் போது அதற்கேற்ற வகையில் பேசுகிறது. கனிவு காட்டும் போது தேன் சுவை சொற்களை சொல்கிறது. மிரட்ட வேண்டிய நேரத்தில் அதையும் செய்கிறது.  சுவை மிக்க உணவுகளையும் சுவைக்கிறது.

இப்படி பல்வேறு கடமைகளையும் திறமையாக காலம் முழுவதும் நாக்கு செயல்படுத்தி வருகிறது. இந்த நாக்கு போலத்தான் என்னுடைய நிலைமையும் (முதல்வர் இப்படிச் சொன்னபோது டமமெவன்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையைத் தட்டிக்கொண்டே இருந்தனர். இதில் ஜெ பேசியது கூட கேட்காமல் போனது!)

தமிழகத்தில் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளனர். அவர்கள் ஜெயலலிதா எப்போது தவறு செய்வார், பிழை செய்வார் என்று பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல பத்திரிகைகளும், தொலைக்காட்சியினரும் ஜெயலலிதா தவறு செய்ய மாட்டாரா? அதை வைத்து பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கலாம், டிவிக்களின் டி.ஆர்.பி. ரேட்டை உயர்த்தலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டெல்லியிலே செயல்படும் மத்திய அரசோ ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விட்டாரா? இனி நாம் தமிழகத்தைவாழ விட கூடாது என்று கங்கணம் கட்டி செயல்படுகின்றனர். ஜெயலலிதா விடுக்கும் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு நாம் சலுகைகளை வழங்கினால் ஜெயலலிதா அசைக்க முடியாத சக்தியாக மாறி விடுவார் என்று மத்திய அரசு நினைக்கிறது. அதனால்தான் மண்ணெண்ணெய் வேண்டுமா? அதை உடனே 50 சதவீதமாக குறைத்து விடுங்கள் என்று உத்தரவு போடுகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் எத்தனை முறை கேட்டாலும் அவருக்கு நிதி வழங்காதே என்று நிதித்துறைக்கு கட்டளையிடுகிறார்கள். தமிழகம் மின் பற்றாக்குறையால் திண்டாடுகிறதா? அந்த மக்களே இருளில் தவிக்கிறார்களா? கவலையில்லை. தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் வழங்காதே என்று இப்படி பல உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்கிறது.

தமிழகத்தை வாழ விடக் கூடாது. தமிழகம் தலை நிமிர்ந்து விடக் கூடாது என மத்திய அரசு பல்வேறு அடக்குமுறைகளை ஏவுகிறது. இத்தனை இடையூறுகள் செய்தாலும் போதுமான மண்ணெண்ணெய் வழங்காவிட்டாலும், மின்சாரம் வழங்காவிட்டாலும் நிதி ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும் இங்கு இயன்ற வரையில் நிதி ஆதாரங்களை திரட்டி வெற்றிகரமாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

இப்படி என்னை சுற்றி மத்திய அரசும் சரி, இங்கே உள்ள எதிர்க்கட்சிகளும் சரி. எதிரிகளாகவே உலா வருகிறார்கள். அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி வெற்றிகரமாக ஆட்சி செய்வதுடன் பல்வேறு சாதனைகளையும் நாம் செய்து கொண்டு வருகிறோம்.

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அவற்றை மீறி தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வேதனைகளை சாதனைகளாக்கி இந்த ஆட்சியை நாங்கள் வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். அதனால்தான் நான் என்னுடைய நிலையை நாக்குக்கு இணையாக கூறினேன்.

வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா கூறியது போல இங்கு என்னை வசைப் பாடியவர்களுக்கும், இங்கு ஆலோசனை வழங்கியவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கைத்தட்டல் மழைக்கிடையே பேசி ஓய்ந்தார் ஜெயலலிதா.

-வணக்கம் இந்தியா

‘கொலவெறி’ புகழ் ‘3′ மார்ச் 30ல் ரிலீஸ்!
கொலவெறி... என்ற ஒரேயொரு பாடலால் உலகமெங்கும் பிரபலமாகி, பிஸினஸில் எக்கச்சக்க பணத்தையும் தனுஷுக்கு ஏகப்பட்ட வாய்ப்பையும் அள்ளிக் கொட்டிய ‘3′ வரும் மார்ச் 30-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

தனுஷ் – ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள இந்தப் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரித்துள்ளார்.

ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவுக்கார இளைஞர் அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தையும் தனுஷே எழுதியுள்ளார்.

கொலவெறி பாடலுக்கு கிடைத்த பெரும் புகழும் வரவேற்பும், தனுஷுக்கு இந்திப் பட உலகில் பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளது. அவர் இப்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு இந்திப் படத்தை இயக்குகிறார்.

படத்தின் வெளியீட்டு உரிமை பெரும் விலைக்குப் போயுள்ளது. ரஜினி படங்கள் தவிர வேறு எந்த நடிகர் படத்துக்கும் கிடைக்காத அளவு பிறமொழி உரிமைக்கான விலை 3-க்கு கிடைத்துள்ளது.

சென்னையில் திரையுலகினருக்காக படத்தின் சிறப்புக் காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

அடுத்த 10 ஆண்டுகளில் 20000 மெ வா மின்சாரம்… ஆனா ரூ 15 லட்சம் கோடி வேணும்… – ஜெ கனவு!
சென்னை: ரூ 15 லட்சம் கோடி இருந்தால் தமிழகம் அடுத்த பத்தாண்டுகளில் பெரும் வளர்ச்சி பெறும், 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும், என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘2023ல் தமிழ்நாடு தொலைநோக்கு  பார்வை’ என்ற அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு பேசியது:

“இந்த நிகழ்ச்சி, தமிழக பொருளாதார வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த நாள். 2011-ம் ஆண்டு நான் பதவியேற்றபோது தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக்குவேன் என்று உறுதி அளித்தேன்.

அமெரிக்கா குறித்து மார்ட்டின் லூதர் கிங்குக்கு பெரும் கனவு உண்டு. அதைப் போல சிறந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கு உண்டு.  வேலையில்லாத இளைஞர்கள் இல்லை, முற்றிலுமாக வறுமை ஒழிப்பு, கல்வி, குடிநீர், துப்புரவு ஆகியவற்றுடன் பாதுகாப்பு, வளம், அமைதி ஆகியவற்றை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது எனது லட்சியமாகும்.

தொலைநோக்கு பார்வை திட்டம் ஏன்?

வரும் நூற்றாண்டில் தமிழகத்தை பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன்.  இந்த கனவை நினைவுப்படுத்தும் வகையில் 2023 தொலைநோக்கு பார்வை திட்டம் அமைந்துள்ளது. தலைவர்கள் தாங்கள் காணும் கனவுகளை நனவாக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். எங்கு தொலைநோக்கு பார்வை இல்லையோ அங்கு நம்பிக்கைக்கு இடமில்லை.

இப்போது அளிக்கப்படும் தொலை நோக்கு பார்வை திட்டம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் கிடைக்கும். அனைத்து வகையிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக இத்தகைய தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.  இன்னும் 10 ஆண்டுகளில் இதனை செயல்படுத்த இருக்கிறோம்.  இன்னும் 11 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட இது 20 சதவீதம் கூடுதலாக இருக்கும்.

தனிநபர் வருமானம் ரூ 4.5 லட்சமாக உயரும்!

இன்னும் 11 ஆண்டுகளில் மக்கள் தொகை 15 சதவீதம் அளவுக்கு உயரும் என்பதை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி தனி நபர் வருமானம் 6 மடங்கு உயரும். தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா ஆகிய ஆசிய நாடுகளில் 1989ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் 7 முதல் 10 சதவீத வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது.

ஆசியாவில் சில நாடுகளும், இந்தியாவில் சில மாநிலங்களும் அதிகளவில் வளர்ச்சி விகிதத்தை அடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் 11 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 11 ஆண்டுகளில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 6 மடங்கு, அதாவது 4 லட்சத்து 50 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும்.  இது உலக நாடுகளில் உயர், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு சமமாக இருக்கும்.

வறுமையற்ற மாநிலமாக தமிழகம் மாறும்

இந்த தொலைநோக்கு பார்வையின் மூலம்  மாநிலம் முழுவதும் ஏற்றத் தாழ்வுகள் குறையும் அளவுக்கு நடவடிக்கைகள் அமையும்.  குறைந்த வருவாய் பிரிவினருக்கு கணிசமான ஆதாரங்களை அளிப்பதின் மூலம் வறுமையற்ற மாநிலமாக தமிழகம் மாறும்.  2023ம் ஆண்டில் தமிழகத்தில் யாரும் பின்தங்கி இருக்கக்கூடிய நிலைமை இருக்காது.

அனைவருக்கும் குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். திறந்த சாக்கடை திட்டம் முற்றிலுமாக நீக்கப்படும். குடிசைகளற்ற, குடிசைப் பகுதிகளற்ற நிலைமையை உருவாக்க ஏழை மக்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப 25 லட்சம் வீடுகள் கட்டப்படும்.  உலகத்தரத்துக்கு ஈடாக உயர்நிலைக் கல்வியை கிடைக்கச் செய்வதுடன் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரிக்கப்படும்.

ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு தொழில், வர்த்தக நிறுவனமும் தங்கு தடையற்ற நிலையான மின்சாரத்தை பெறச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும்.

மாநிலத்தின் நீண்டகால மின் தேவை கருத்தில் கொண்டு இன்னும் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய  நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய உற்பத்தி

தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவையை கருத்தில் கொண்டு இன்னும் 11 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்த 10 மையங்களை அமைக்க வேண்டும்.  அறிவியல் விவசாய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தி  விவசாய உற்பத்தியை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் இதில் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகத் தரம் வாய்ந்த 10 நகரங்கள் தமிழகத்தில் உருவாக்கப்படும். தற்போதுள்ள நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இந்த நகரங்கள் விளங்கும்.

தேவை ரூ.15 லட்சம் கோடி… நிதி கொடுங்க!

இந்த திட்டங்களை நிறைவேற்ற கணிசமான நிதி தேவை. இவற்றை நிறைவேற்ற 15 லட்சம் கோடி ரூபாய் தேவை என்று மதிப்பிடப்படுகிறது.  மாநில அரசு மட்டுமே இதற்கான ஆதாரத்தை திரட்ட முடியாது என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். தனியார் துறை அமைப்புகள், வங்கிகள், நேரிடை வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகள் மூலம் கணிசமான நிதியை திரட்ட முடியும்.

தமிழக மக்கள் சார்பில் அடிப்படை வசதி சேவைகளை பெறுவதற்கு மாநில அரசு  முக்கிய பங்காற்றும்.  அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் துறை பங்களிப்பை ஈர்ப்பதற்கு தமிழகம் முதலீடு செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்,” என்றார் முதல்வர் ஜெயலலிதா.

கிங்பிஷருக்கு ரூ 1650 கோடி பெயில் அவுட் தரும் ஸ்டேட் வங்கி!
மும்பை: நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகச் சொல்லப்படும் கிங்பிஷர் விமான  நிறுவனத்துக்கு ரூ 1650 கோடி கடன் தர அரசுக்கு சொந்தமான பாரத ஸ்டேட் வங்கி  முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியும் தன் பங்குக்கு சில நூறு கோடிகள் தர முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

முதல்  கட்டமாக குறுகிய கால இயக்க முதலீட்டுத் தொகையாக ரூ 700 கோடியையும், வங்கி  உத்தரவாதத் தொகையாக ரூ 500 கோடியையும் கிங்பிஷருக்குத் தருவதன் மூலம்,  அந்நிறுவனத்தின் அன்றாடப் பணிகள் பாதிப்பின்றி நடக்க உதவ முன்வந்துள்ளது  எஸ்பிஐ.

மேலும் அடுத்த ஆண்டு இந்த வங்கிக்கு கிங்பிஷர் செலுத்த வேண்டிய ரூ 550  கோடியைத் திருப்பித் தரும் கெடுவை நீட்டிக்கவும் எஸ்பிஐ முடிவு  செய்துள்ளது.

மேலும் கிங்பிஷர் செலுத்த வேண்டிய வருமான வரி  பாக்கித் தொகையான ரூ 360 கோடிக்கு எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள்  உத்தரவாதம் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த அரசு வங்கிகளின் முடிவு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் வாதாட தடை
சென்னை: வெளிநாட்டை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்தியாவில் சட்டப்பயிற்சி பெற தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த பல சட்டத் தொழில் நிறுவனங்கள் இந்திய  நீதிமன்றங்களில் செயல்பட துவங்கின. இதனால் இந்தியாவில் உள்ள சட்டத் தொழில்  நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள்,  இந்திய நீதிமன்றங்களில் சட்டத் தொழிலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்  என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.கே.பாலாஜி என்பவர் பொதுநல மனு ஒன்றை  தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம்  ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் பெண்  வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரசன்னா உட்பட பலரும் வாதாடினார்கள்.

வெளிநாட்டில்  இந்திய வழக்கறிஞர்கள் தொழில் செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆனால்  இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் சட்டத் தொழிலில் ஈடுபடுகின்றன. அதற்கு  தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

விசாரணைக்கு பிறகு நேற்று அளிக்கப்பட்ட 77 பக்கம் கொண்ட தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது,

இந்திய  வழக்கறிஞர்கள் அனைவரும் இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் -1961 மற்றும் இந்திய  பார் கவுன்சில் விதிகளின்படி தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த  சட்டப்படி இந்தியர்களைத் தவிர வெளிநாட்டு சட்ட நிறுவனங்களோ அல்லது  வெளிநாட்டு வழக்கறிஞர்களோ தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியாது.

இந்திய வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி தங்கள் பெயர்களை பதிவு செய்யாத  வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் பயிற்சி மேற்கொள்ள முடியாது. ஆனால்  இந்தியாவுக்கு வந்து சட்ட ஆலோசனைகள் வழங்கலாம்.

சர்வதேச வழக்குகள்,  நாட்டு பிரச்சனைகள், வெளிநாட்டு விவாகரத்து வழக்குகள் உள்ளிட்ட  வழக்குகளில் வெளிநாட்டு வழக்கறிஞர்களும், நிறுவனங்களும் ஆலோசனை வழங்கலாம்.  மேலும் நாட்டு பிரச்சனைகள் தொடர்பான தீர்வுக்காக மத்தியஸ்தம், சமரசம்  ஆகியவற்றில் ஆஜராகலாம். ஆனால் வழக்கை தடுக்க முடியாது.

சர்வதேச வர்த்தக சமரச வழக்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள், மத்தியஸ்த  பேச்சுவார்த்தை நடத்த தடை இல்லை. ஆனால் பி.பி.ஓ. மூலம் சட்ட சேவைகள் நடத்த  அனுமதி இல்லை. இச்சட்டத்தை மீறி சட்ட சேவைகள் நடத்துவது தெரிய வந்ததால்  இந்திய பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க அனுமதி உண்டு என்று அந்த  தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதம்பருப்பு சாப்பிடுங்க!-நீரிழிவு ஓடிப்போயிடும்!!
நீரிழிவு  நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு  முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதம்  பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக  மருத்துவ விஞ்ஞானிகள்  சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு  மேற்கொண்டனர். அதில் பாதம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை  கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

இன்சுலின் சுரப்பு

நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுகோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு  நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில்  அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை  சேதப்படுத்திவிடும். தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வில், பாதம் பருப்பை  சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான  முந்தைய நிலையில் இருக்கும்  கெட்ட கொழுப்பின் அளவும் குறைவதாக  தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த  65 பேரிடம் பாதம் பருப்பை கொடுத்து சாப்பிட சொல்லி அவர்களிடம் சோதனை  நடத்தப்பட்டது. இதில் நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது ரத்தத்தில்  இருக்கும் குளுகோஸின் அளவு வழக்கமாக இருப்பதைவிட அதிகமாக இருப்பது ஆகும்.  அதே சமயம் அதனை நீரிழிவு நோயாகவும் கருதிவிட முடியாது.

பாதாம் பருப்பை சாப்பிட கொடுக்காத, அதே சமயம் நீரிழிவு நோய்க்கு  முந்தைய நிலையில் இருந்த மற்றொரு குழுவினரைக் காட்டிலும், பாதாம் பருப்பை  சாப்பிட்டவர்களிடம் இன்சுலின் சுரப்பில் வியக்கத்தகு முன்னேற்றம்  இருந்ததோடு, கெட்ட கொழுப்பின் அளவும் குறைந்தது தெரியவந்தது.

உடல்பருமன்

பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும் கூட  டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் பாதாம்  மற்றும் இதர கொட்டை பருப்புகள் உடல் பருமனை எதிர்த்து போராடுவதில் முக்கிய  பங்காற்றுகிறதாம். மேலும் உடற் பயிற்சி இல்லால் இருப்பவர்களுக்கு இருதய  நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறதாம்.

இது  குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர்  மிக்கேல் வியேன் பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு,  இருதய நோய்கள் அருகில் அண்டாது என்று அடித்துக்கூறுகிறார்.

நகங்கள் ஆரோக்கியமாக வளர மசாஜ் பண்ணுங்க!
நகங்கள் அழகோடு ஆரோக்கியத்தையும் எடுத்துக்காட்டுபவை. ஒரு சிலருக்கு நகங்கள்  குட்டையாக வளராமல் இருக்கும். ஒருசிலருக்கு நகங்கள் எளிதில் உடைந்து  விடும். எனவே நகங்களை அழகாகவும் ஆரோக்கியமாக வளர்க்க அழகியல் நிபுணர்கள்  கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக.

நகங்களுக்கு மசாஜ்

சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே  இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து  வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம்.  குளித்தபின்பு நகப் படுகையில் நன்றாக அழுத்தி மசாஜ் செய்வதன் மூலம் ரத்த  ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மாதம்  ஒருமுறை பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து  கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.

உடைவதை தடுக்க

கை‌விர‌ல் நக‌ங்க‌ள் லேய‌ர் லேயராக உடைவதை‌ப்  பா‌ர்‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இத‌ற்கு ‌வீ‌‌ட்டி‌ல்  தூ‌ய்மை‌ப்படு‌த்துவத‌ற்காக பய‌ன்படு‌த்து‌ம் சோ‌ப்பு‌த் த‌ன்மை‌யா‌ல்  ‌ஏ‌ற்படு‌ம் அலர்ஜியால் கூட இரு‌க்கலா‌ம். நக‌த்‌தி‌ல் உ‌ள்ள  நக‌த்த‌ட்டுகளு‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌த்த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது‌ம் கூட  இத‌ற்கு காரணமாக இரு‌க்கலா‌ம். நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள்,  சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்

நகச் சிதைவு

நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண் ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.

சிலருக்கு  நகம் கடினத்தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு  கஷ்டமாக  இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத்  தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய்  தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.

நகச்சொத்தை கவனம்

‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல்  ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல்  நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு  அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த  நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல்  நக‌‌ச்சொ‌த்தை ‌தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன்,  நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது  அவ‌சியமாகு‌ம். ‌‌விர‌ல் நக‌ங்களு‌க்கு நடு‌வி‌ல் சொ‌த்தை ஏ‌ற்ப‌ட்டா‌ல்  உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி அத‌ற்கான காரண‌த்தை அ‌றிவது ந‌ல்லது.

சத்தான உணவுகள்

கை ‌விர‌ல் நக‌ங்க‌ள் இள‌ம் ‌சிவ‌ப்பு  ‌நிறத்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். இ‌தி‌ல் வெ‌ள்ளை ‌நிற‌ம் ர‌த்த  சோகையையு‌ம், ம‌ஞ்ச‌ள் காமாலையையு‌ம் கு‌றி‌க்கு‌ம். சில நேரங்களில்  சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும்.  அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

இரத்தச் சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர்  மாற்றம். இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச்  சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்.

மேலும், இரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்கவேண்டிய `பிங்க்’ நிறம் மறைந்து, வெளுத்துவிடும்.

இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை  அதிகரிக்கச்செய்யும் என்பதால், அந்த சத்து அதிகம் உள்ள ஈரல், கீரைவகைகள்  மற்றும் இறைச்சியை இந்த பாதிப்பு உள்ளவர்கள் உணவுடன் சேர்த்துக்கொள்வது  அவசியம். அல்லது, தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட  நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு, விட்டமின் பி-12  மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

10 நாள் சஸ்பெண்ட்டை எதிர்த்து விஜயகாந்த் வழக்கு-சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: தன்னை சட்டசபையிலிருந்து 10 நாள் சஸ்பெண்ட் செய்து விட்டதால் தொகுதிப்  பணிகளைக் கவனிக்க முடியவில்லை. எனவே இந்த தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்  என்று கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி சட்டசபை சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டசபையில்  கையை நீட்டி ஆவேசமாகப் பேசியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான  விஜயகாந்த்தை 10 நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அவையின்  உரிமை மீறல் குழுவின் விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து தற்போது விஜயகாந்த் வழக்குப் போட்டுள்ளார். விஜயகாந்த் தாக்கல் செய்துள்ள வழக்கு:

சட்டசபையில்  கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 1ந் தேதி  விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் கலந்துகொண்டு, எங்கள் கட்சி  எம்.எல்.ஏ.யான சந்திரகுமார் பேசிக்கொண்டிருந்தார்.

அவரது பேச்சில், முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு சில கருத்துகளை  கூறினார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் நான் எழுந்து பேசினேன். எனது  பேச்சு தொடர்பாக என்மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவையின்  அன்று நடந்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக உரிமை மீறல்  விசாரணைக்குழுவுக்கு அனுப்பி வைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். அப்படி  அனுப்பப்பட்ட 24 மணி நேரத்துக்குள், அதாவது மறுநாளிலேயே சட்டசபையில்  உரிமைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களுக்கு அந்த அறிக்கையின் நகல் அளிக்கப்படவில்லை. மேலும்,  அந்த பிரச்சினையில் அவையில் விவாதம் நடத்தப்படவும் இல்லை. ஆனால் குரல்  ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, அதன் மூலம் என்னை அவையிலிருந்து 10 நாட்களுக்கு   சஸ்பெண்ட் செய்வதாக அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த  தீர்மானத்தை எதிர்த்து அவையில் இருந்து எங்கள் கட்சியுடன் தி.மு.க. மற்றும்  கம்யூனிஸ்டு கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

அவையில் இருந்து  சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதால், எதிர்க்கட்சித்  தலைவர் அந்தஸ்து மற்றும் எம்.எல்.ஏ. என்ற தகுதியில் எனக்கு  அளிக்கப்பட்டிருந்த அனைத்து சலுகைகளும் திரும்ப பெறப்பட்டு விட்டன.

கடந்த  கூட்டத்தொடரில், 2 ந் தேதியன்று தொடங்கி 4 ந் தேதி முடிவடைந்த நிலையில்,  எனது  சஸ்பெண்ட் காலத்தில் 3 நாட்கள் முடிந்துவிட்டன. அடுத்து நடைபெறும்  கூட்டத்தொடரில் இன்னும் 7 நாட்களுக்கு இந்த  சஸ்பெண்ட் காலம்  கழிக்கப்படும். ஆனால் அடுத்த கூட்டத்தொடர் தொடங்கும் தேதி  அறிவிக்கப்படவில்லை.

தற்போதுள்ள உத்தரவின்படி, எனக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவு தொடர்வதால்  எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது தொகுதி மக்களுக்கு பணி செய்ய முடியவில்லை.

எனது  பணியை தடுப்பது அரசியல் சட்டவிதிகளுக்கு முரணானது. சட்டசபையில்  பேச்சுரிமைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையை  பயன்படுத்தி, எம்.எல்.ஏ. ஒருவரின் உரிமையை ஆளும்கட்சி மறுக்கிறது. எனவே  இந்த விவகாரத்தில் கோர்ட் தலையிட வேண்டும்.

சட்டசபையில் இருந்து என்னை சஸ்பெண்ட் செய்து 2 ந்தேதி அவையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். அதை  சட்டவிரோதம் என்று அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், மார்ச் 2ம் தேதிக்குள் இதுகுறித்து  விளக்கம் அளிக்குமாறு கூறி சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோருக்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கையும் அன்றைக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டார்.